புயல் பற்றிய விவரங்கள்
மலர்களே… மலர்களே…
உலகின் விலையுயர்ந்த புவியடிப் பூசணம்…
ஆகாயத் தாமரை..
உலக பூமி நாள் விழிப்புணர்வு
பயமுறுத்தும் சில பூச்சி இனங்கள்
பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி
மூளை செயலிழக்குமா..?
ஐ.சி.இ நம்பர்
நெல்லைச்சீமையும் சாகித்திய அகாதமியும்
கடலோரப் பகுதிகளை காக்க பனைமரம்
இயற்கை சூழலை மீட்போம்
ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்
ஆச்சா மரம்
சின்னத்தம்பி தும்பிக்கை தூக்கிய தன்னம்பிக்கை
பாம்புத் தீவு
கலை இழக்கும் பல் (கலை) கழகங்கள்
சின்னதம்பி தும்பிக்கை தூக்கிய தன்னம்பிக்கை (பாகம் - 2)
நூற்றாண்டு நோக்கி அரிமா சங்கம்.
11th Sep 2019
மனிதன் தான் உலகின் சிறந்தவன் என்று கட்டமைக்கப்பட்டு அது அவனாலேயே பரப்பப்பட்டு அவனாலேயே நம்பப்பட்டும் வருகிறது. இது தானே தன்னம்பிக்கையும் கூட! கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் ஒன்றில்.... ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது.... கருடா செளக்கியமா? யாவும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே! கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!’ - இந்த வரிகள் கஜராஜனான சின்னத்தம்பிக்கும் மனிதர்களுக்கும் சாலப் பொருந்தும்.
யார் இந்த சின்னத்தம்பி? இவனுக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன தொடர்பு.... தும்பிக்கையின் மீது மனிதன் தீராத நம்பிக்கை வைத்திருக்கிறான். அதன் விளைவுதான் காட்டைவிட்டு நாட்டிற்கு வந்து கோயில் குழந்தையாய் மனிதன் தரும் சில்லரைக்கு சிலாகித்து ஆசீர்வாதம் செய்து மனிதனை வரம்பெற்றதாய் பூரிக்கவைக்கிறது யானை...!
முதல் கேள்வி முற்று பெறுவதற்கு முன்னரே முந்திச்சென்றுவிட்டேன்.... இதோ கேள்வியினை ஆராய்வோம்!
யார் இந்த சின்னத்தம்பி?
சின்னத்தம்பி 20 வயதிற்கும் குறைவேயான ஆண் யானை.... கொங்கு நாடான கோவையின் அடர்ந்த காடு... அழகான வாழ்க்கை.... படிப்படியாக கவியரசரின் மேற்கூறிய வரிகளை நிரூபணம் செய்தான் மனிதன்.... ஆம் ஆறறிவோன் நாட்டைவிட்டு காட்டினுள் கால் வைத்ததும்.... தமது இடத்தை ஆக்கிரமித்துவிட்ட மனிதனின் பாதையையே விலங்குகளும் பின்பற்றின..... இதன் நீட்சிதான் யானை மனித மோதல்.... ஆம் காலசுழற்சியில் சுயநலம் எனும் அச்சாணி இணைக்கப்பட்டு சுழன்ற இவ்வுலகில் ஆறறிவு ஐந்தறிவை உதாசீனம் செய்தபோது.... ஐந்தறிவின் தன்னம்பிக்கை ஊற்றாய் எழுந்தவனே ’சின்னத்தம்பி’.
பக்கத்து வீட்டாரின் அடையாளம் தெரியாத நமக்கும்... உறவினர் வீட்டின் விலாசம் பரிட்சயமாய் விளங்கிடாத நமது கரத்தை தன் தும்பிக்கையில் பொருத்தி தன் காடெனும் வீட்டிற்காய் பேசியவன் இவன்!
சாதனையாளனை இந்த ஊடகம் ஒரு நாள்வரை பேசும்.... அரசியல்வாதிகளை ஆயுசுக்கும் பேசும்... சில்லரை விடயங்களை சீக்கிரம் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒருநாளும் விலங்கினகளுக்கு மிகபெரிய இடத்தை ஒதுக்கி இருக்கிறதா என்றால் நிச்சியமாக இல்லை அந்த இல்லையை உடைத்தவன் சின்னதம்பி ஒரு விலங்கை, யானையை ஒரு மாதகாலம் பேசியது தமிழக ஊடகங்கள், கொண்டாடியது, பாதுகாத்தது, சின்னதம்பிக்கு ஒரு கீறல் விழுந்தால் கூட உரக்க கத்தியது தமிழ் மக்களுக்கு இப்படி தன் தன்நம்பிக்கை மீது பலத்தை போட்டு யானையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவன் யானை சின்னதம்பி ..
வனத்துறையால் பிடிபடுகிறான், காலா படத்தில் வரும் கதாநாயகனை போல மயக்க ஊசி செலுத்தி அரைமயக்கத்தில் இருந்த போதும் நிலம் என் உரிமை என்ற போதையோடு திமிராய் நிற்கிறான் சின்னதம்பி அது வரை யானையை பிடியுங்கள் என்று உறக்க கத்திகோண்டு இருந்த கூட்டித்தில் கண்ணீர் பெயர் காரணமின்று வழிய தொடங்குகிறது, எங்கும் அமைதி சின்னதம்பி சிலிர்க்க வைக்கிறான்.
அதே நாளில் கோயம்புத்தூரில் இருந்து ஆனைமலை காட்டிற்கு இடமாற்றம் அமைதி பூங்கவாய் மாறிவிட்ட நினைவில் கோவை, இரண்டு நாட்களே கடந்த நிலையில் மீண்டும் ஒரு தகவல் வனத்துறையை தலைசுற்ற வைத்தது காட்டில் இருந்து மீண்டும் நகரத்திற்குள் நுழைகிறான் சின்னதம்பி, அடுத்த அடுத்த தகவல், ஆதிகாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறான் சின்னதம்பி இந்திய வரலாற்றில் இப்படி ஒரு யானையை பார்த்தில்லை என்று வனம் முழுக்க தகவல் பரவுகிறது, பெருத்த உடலையும், ஆடும் தலையுமாய் ஆடிவருகிறான் சின்னதம்பி தான் வாழ்ந்த காட்டை நோக்கி.
இவனுக்கு தான் தன் மண்ணின் மீது எவ்வளவு பெரிய காதல், அப்படி என்ன திமிர். ஆம் திமிர் பிடித்தவன் தான். இவ்வுலகின் தலைவன் ஆயிற்றே அவன், காட்டின் ராஜன் கஜராஜன் அல்லவா அவன்.
தன் தன்னம்பிக்கை மூலம் இந்த புவியில் விலங்குகளுக்கான அவசியத்தை தன் தும்பிக்கையை தூக்கி உறுதிபடுத்தி இருக்கிறான் சின்னதம்பி.
சின்னதம்பியின் தற்போதைய நிலை என்ன? இன்னொரு கட்டுரையில் தருகிறேன்…
புயல் பற்றிய விவரங்கள்
மலர்களே… மலர்களே…
உலகின் விலையுயர்ந்த புவியடிப் பூசணம்…
ஆகாயத் தாமரை..
உலக பூமி நாள் விழிப்புணர்வு
பயமுறுத்தும் சில பூச்சி இனங்கள்
பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி
மூளை செயலிழக்குமா..?
ஐ.சி.இ நம்பர்
நெல்லைச்சீமையும் சாகித்திய அகாதமியும்
கடலோரப் பகுதிகளை காக்க பனைமரம்
இயற்கை சூழலை மீட்போம்
ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்
ஆச்சா மரம்
சின்னத்தம்பி தும்பிக்கை தூக்கிய தன்னம்பிக்கை
பாம்புத் தீவு
கலை இழக்கும் பல் (கலை) கழகங்கள்
சின்னதம்பி தும்பிக்கை தூக்கிய தன்னம்பிக்கை (பாகம் - 2)
நூற்றாண்டு நோக்கி அரிமா சங்கம்.
Copyright © 2018 Amudam Monthly Magazine